எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்

எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்
ஆ, பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்

1. அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் துாய அன்பு
இப்புவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் – எந்தன்

2. சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை- எந்தன்

3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்- எந்தன்



enthdhan iyesu vallavar endrum nadaththuvar

enthdhan iyesu vallavar endrum nadaththuvar
aa, perinpam avar en dhanjchame
anuthinam anparutan inainththu selluven

1. arpudhamam avar anbu
andinor kakkum thooya anbu
ibbuvinil ivaraippol anpar evarundu
maradhavar enthdhan iyesu endrum parriduven – enthdhan

2. sarva valla thevanivar
santhdhamum thazhmai ullavaram
enth nalume enthdhanaiye thangkidum vallavaram
nambiduven endrenrumay enthdhan iyesuvai- enthdhan

3. karthdhar enthdhan meybparavar
seerana bathai nataththiduvar
enthdhan vazhi semmaiyakki eetrru niruththuvar
enthdhan nesar kaththiduvar endrum pin selluven- enthdhan